Tuesday, 22 July 2008

தவளையும் நானும்...

நான் ஒரு தவளை போல. ஆம், தவளையால் எப்படி நீரிலும், நிலத்திலும் வாழ முடிகிறதோ, அது போல தான், எனக்கும்,இரு வேறு விருப்பங்கள், இரு வேறு எண்ணங்கள், இரு வேறு கொள்கைகள், உள்ளன. கம்யூனிசமும், பெரியாரிசமும், எனக்குமிகவும் பிடிக்கும். அதன் தாக்கங்களும் என்னுள் உண்டு. ஆனாலும், வீட்டில் உள்ளவர்கள் கோயிலுக்கு அழைத்தால், பிரியமுடன் செல்வேன். இரு கரம் கூப்பி, கண்களை மூடி, நானும், மற்றவர்களை போல நிற்பேன்.... ஆனால், என்னவேண்டுவது, யாரிடம் வேண்டுவது, எப்படி வேண்டுவது என்பதைத்தான், என்னுடைய இந்த முப்பதாவது வயதிலும்யோசித்துக்கொண்டிருப்பேன். வீட்டிலும், திருமணத்திற்கு பிறகு, விஷேட நாட்களின் போது, மற்ற குடும்பத்தலைவிகளைபோல, சாமி படங்களுக்கு பூ வைத்து, விளக்கேற்றுவேன். இப்படியெல்லாம் இருந்தாலும், நானும் ஒரு கம்யூனிஸ்ட்தான்.எனக்கு எளிமையாக இருப்பது மிகவும் பிடிக்கும். ஆனால், சில நேரங்களில், பகட்டுத்தனமும் பிடிக்கும். இப்படி, இரு வேறு விருப்பங்களின் சங்கமமாக இருக்கும் நானும், தவளையும் ஒன்றுதானே....?

3 comments:

Unknown said...

//-கம்யூனிசமும், பெரியாரிசமும், எனக்குமிகவும் பிடிக்கும். அதன் தாக்கங்களும் என்னுள் உண்டு. ஆனாலும், வீட்டில் உள்ளவர்கள் கோயிலுக்கு அழைத்தால், பிரியமுடன் செல்வேன். இரு கரம் கூப்பி, கண்களை மூடி, நானும், மற்றவர்களை போல நிற்பேன்.... ஆனால், என்னவேண்டுவது, யாரிடம் வேண்டுவது, எப்படி வேண்டுவது என்பதைத்தான், என்னுடைய இந்த முப்பதாவது வயதிலும்யோசித்துக்கொண்டிருப்பேன்-//
எனக்கும் அதே நிலைதான்

GEETHA ACHAL said...

எப்படி இப்படி எல்லாம்...அருமையாக சொன்னீங்க...

நீங்கள் மட்டும் இல்ல...பெரும்பாலும் 80% மக்கள் இப்படி தான் என நினைக்கின்றேன்.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in